சிங்கப்பூரில் பாடகர் உன்னிகிருஷ்ணன் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் பாடகர் உன்னிகிருஷ்ணன் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி!
Photo: LISHA

 

சிங்கப்பூரின் பீச் சாலையில் (Beach Road) உள்ள கோல்டன் மைல் டவர் (Golden Mile Tower) என்றழைக்கப்படும் மாலில் அமைந்துள்ளது கார்னிவல் சினிமாஸ் (CARNIVAL CINEMAS). வரும் அக்டோபர் மாதம் 07- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு கார்னிவல் சினிமாஸில், இந்திய அரசால் தேசிய விருது பெற்றவரும், பிரபல பின்னணி பாடகருமான உன்னிகிருஷ்ணன் பங்கேற்கும் ‘Unnikrishnan Live in Singapore 2023’ என்ற இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த இன்னிசை நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட பாடல்கள் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி பிரம்மோற்சவம்: சிங்கப்பூர்- திருப்பதி இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

பாடகர் உன்னிகிருஷ்ணன் தலைமையிலான குழுவில், பாடகர்கள் உத்ரா உன்னிகிருஷ்ணன், சையது ஷுபாஹான், ஹரி பிரியா, அருள் பிரகாசம், சுதாஷினி, பரசு கல்யாண், கல்யாணி கௌரிசங்கர் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் மற்றும் இசைக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

“சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ‘ஏர் இந்தியா’ விமானத்தில் செல்ல கட்டணம் எவ்வளவுத் தெரியுமா?”- விரிவான தகவல்!

இந்த இன்னிசை நிகழ்ச்சியை நேரில் காண விரும்புவோர் https://sg.bookmyshow.com/e/UNNIINSG என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று, அதற்குரிய பார்வையாளர் கட்டணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.