கோவிட்-19 தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு ஊதியமில்லா விடுப்பு!

covid-19 vaccination Singapore
(Photo: MCI)

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல், கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்புகள் இருந்தும், தடுப்பூசி போடாமல் இருக்கும் ஊழியர்களுக்கு ஊதியமில்லா விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கோவிட்-19 தொற்றிலிருந்து தங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காக, அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக எடுத்துரைத்தும் பலர் இன்றளவிலும் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிதாக 102 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதனால் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி இருந்தும், போடாமல் இருக்கும் அரசு ஊழியர்கள் ஊதியமில்லா விடுப்பில், வீட்டிற்கு அனுப்பப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்படலாம் என்று சிங்கப்பூர் அரசு சேவைப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறு பல வழிகளில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை, தடுப்பூசி போடுவதற்கு வலியுறுத்தி வருவதாகவும் அப்பிரிவு தெரிவித்தது.

கோவிட்-19 தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாதவர்கள், தேவை ஏற்படும் நிலையில் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அச்சேவைப்பிரிவு கூறியுள்ளது.

மேலும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்கள், அவர்களுடைய சொந்த செலவிலேயே மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி போட்டு, பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று அரசு எதிர்ப்பது குறிப்பிடத்தக்கது.

“சொந்த நாடு சென்றால் வேலையை இழந்துவிடுவோமோ” என்ற கவலையுடன் வெளிநாட்டு ஊழியர்கள் – கட்டுமான நிறுவனம்