இந்த வகையான கோவிட்-19 நோயாளிகளுக்கு கட்டணம் S$25,000 – MOH

COVID-19 unvaccinated by choice could face S$25,000 bill
(Photo: MOM)

சிங்கப்பூரில் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கோவிட்-19 நோயாளிகளுக்கு கட்டணம் சுமார் S$25,000 தொகையாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (நவம்பர் 12) தெரிவித்துள்ளது.

அதாவது தீவிர சிகிச்சை தேவைப்படும் கோவிட்-19 நோயாளிகளுக்கு அந்த கட்டண முறை பொருந்தும் என்றும் MOH தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகளில் புதிதாக 136 பேருக்கு நோய்த்தொற்று

வரும் டிசம்பர் 8 முதல், விருப்பத்தின்பேரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அனைத்து COVID-19 நோயாளிகளும் மருத்துவமனைகள் அல்லது COVID-19 சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டால், அவர்களது சொந்த மருத்துவக் கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும் என்று MOH திங்களன்று அறிவித்தது.

அரசு மானியங்கள் மற்றும் மெடிஷீல்ட் லைஃப் அல்லது ஒருங்கிணைந்த ஷீல்ட் திட்டத்தை சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று அமைச்சகம் கூறியது.

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல், சிங்கப்பூர் அரசு பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளின் மருத்துவ கட்டணங்களை அரசாங்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த MOH, நோயாளியின் உடல் நிலையின் தீவிரம் மற்றும் அவர்களுக்கு கவனிப்பு அளிக்கப்படும் வசதியின் வகையைப் பொறுத்து கட்டணம் மாறுபடும் என்று நேற்று கூறியது.

விரைவுச் சாலையில் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு நேர்ந்த அனுபவம் – இப்படியும் சிலர்