சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் சிறப்பு விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை மற்றும் டிக்கெட் விவரம்..!

(Photo: HCI)

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, இந்தியா சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. அதற்கு வந்தே பாரத் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்தும் ஜூன் 09ஆம் தேதி முதல் தமிழகத்திற்கு சுமார் 15 விமானங்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விமானம் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மூளைக் கட்டியால் அவதிப்படும் வெளிநாட்டு ஊழியர் – S$50K நன்கொடை வழங்குமாறு முதலாளி கோரிக்கை..!

இந்த சிறப்பு மீட்பு விமானங்களின் திருத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட அட்டவணை மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிக்கெட் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பிட்டபடி, அதிக இடங்களுக்கு அதிக விமானங்களைச் இயக்கப்படும் என்றும், அதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted by India in Singapore (High Commission of India, Singapore) on Monday, June 8, 2020

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விமானங்களுக்கான மின்னஞ்சல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகளை பயணிகள் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது குறித்த அப்டேட் மற்றும் இதர விவரங்களுக்கு சிங்கப்பூர் இந்திய தூதரக வலைத்தளத்தைப் பார்க்கவும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 386 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!