சிங்கப்பூரில் மின் சிகரெட்களை வாங்கிய, வைத்திருந்த சுமார் 4,500 க்கும் மேற்பட்டோர் சிக்கினர் – ரிப்போர்ட்

Unsplash

சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் இ-வேப்பரைசர்கள் என்னும் மின் சிகரெட்களை இறக்குமதி செய்ததற்காக சுமார் 7,593 குற்றவாளிகள் பிடிபட்டனர்.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு இதே குற்றத்திற்காக 6,192 பேர் பிடிபட்டனர். கடந்த ஆண்டில் அதிக குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

ஊழியர் பற்றாக்குறை… கட்டுமான, கடல் துறை Work permit ஊழியர்களின் நுழைவு நடைமுறை எளிமை! – செய்ய வேண்டியது என்ன?

கூடுதலாக, அதே 2021ஆம் ஆண்டில் 4,697 குற்றவாளிகள் மின் சிகரெட்களை வாங்குதல், பயன்படுத்துதல் அல்லது வைத்திருந்ததற்காக சிங்கப்பூரில் பிடிபட்டனர்.

பிடிபட்ட இந்த குற்றவாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த குற்றங்களும் அதிகரித்துள்ளது, அதே குற்றத்திற்காக அப்போது 1,266 குற்றவாளிகள் பிடிபட்டனர்.

இந்த புள்ளிவிவரங்களை இன்று திங்கள்கிழமை (மார்ச். 7) சுகாதார அமைச்சகத்தின் நாடாளுமன்றச் செயலர் ரஹாயு மஹ்ஜாம் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

இரத்தம் தோய்ந்த துண்டான கால் வீடியோ இணையத்தில் பரவல்… கண்டெடுக்கப்பட்ட சடலம் – என்ன நடந்தது?