S$93 மில்லியன் மின்னிலக்க நாணயத்தை பயன்படுத்தி கலைப்படைப்பை வாங்கிய தமிழர்..!

(PHOTO: Business Today)

சிங்கப்பூரில் தொழில் முனைவராக வசிக்கும் திரு விக்­னேஷ் சுந்­த­ரே­சன் சமீபத்தில் ‘எவ்­ரி­டேய்ஸ்: த ஃபர்ஸ்ட் 5,000 டேய்ஸ் ‘ என்­னும் அரியவகை கலைப்­ப­டைப்பை $69 மில்­லி­யன் (S$93 மில்­லி­யன்) மின்­னி­லக்க நாணயத்தை பயன்படுத்தி வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.

‘பீபல்’ என்னும் மைக் விங்­கிள்­மன் என்ற கலை­ஞ­ரால் படைக்கப்பட்ட மெருகூட்டியது போன்­ற ­மெய்­நி­கர் புகைப்­ப­ட ­தொகுப்பை மார்ச் 11ஆம் தேதி நடை­பெற்ற கிறிஸ்டீ’ஸ் ஏலத்­தில் மெட்­டா­கோ­வன் என்­ப­வர் ஏலத்­தில் எடுத்­த­தா­க கூறப்பட்டுள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு மீண்டும் திரும்புவது குறையலாம்”

அந்த மெட்­டா­கோ­வன் என்பது விக்­னேஷ் சுந்­த­ரே­சன்­தான் என்று ‘சப்ஸ்­டேக்’ இணையதளத்தில் அவரே தமது அடை­யாளத்தை வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.

திரு விக்­னேஷ் (வயது 32) தமிழ்­நாட்­டைச் சேர்ந்தவர் என்றும் இவருடைய பெயரில் வீடோ காரோ இல்லை என்­றும் தான் ஒரு சாதாரண மனிதன் என்றும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘போர்ட்கீ டெக்­னா­ல­ஜிஸ்’ என்­னும் சிங்கப்பூர் தக­வல் தொழில்­நுட்ப ஆலோசனை நிறு­வ­னத்­தின் தலைமை நிர்வாகியாக அவர் பணிபுரிவதாகவும், லிட்­டில் இந்தியா அரு­கில் கொண்­டோ­மி­னிய வீடு ஒன்­றில் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருவர் மீது சிறுநீர் கழித்த 6 பேர் தொடர்பான காணொளி – காவல்துறை விசாரணை

ஆனந்த் வெங்­க­டேஷ்­வ­ரன் என்­ப­வ­ரும் விக்­னேஷ்ம் இணைந்து மெட்­டா­பர்ஸ் என்ற உல­கின் பெரிய ‘என்­எ­ஃப்டி ஃபண்ட்’ நிறு­வ­னத்தை நடத்தி வருவதாகவும் 3 ஆண்டுகளுக்கு முன்பு சிங்­கப்­பூ­ரில் குடி­யே­றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து நாளிதழில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொழில்­நுட்ப ஆலோ­ச­க­ராக திரு விக்­னே­ஷும் பத்­தி­ரி­க்கை­யா­ள­ராக திரு ஆனந்­தும் பணிபுரிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

முதன் முதலில் மின்னிலக்க நாணயத்தை சம்பாதிக்க 2013ஆம் ஆண்டு சென்னையில் இருந்தபோது அதற்க்கான வழிகளை தேடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் முதலாளிகள் காத்திருப்பு..!