நார்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Vivian Balakrishnan Official Twitter Page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நார்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள்!

இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (19/02/2022) வெளியிட்டியிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (20/02/2022) முதல் வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி வரை நார்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் (Oslo) அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை (Norwegian Minister for Foreign Affairs Anniken Huitfeldt) சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸூக்கு செல்லும் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று அங்கு நடைபெறும் இந்தோ-பசிபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் (Ministerial Forum on Cooperation in the Indo-Pacific) பங்கேற்க உள்ளார். அங்கு அவர் இணைப்பு (connectivity) மற்றும் டிஜிட்டல் சிக்கல்கள் (Digital Issues) குறித்த வட்டமேசைக்கு இணைத் தலைமை தாங்குகிறார். மேலும், பல்வேறு நாடுகளின் அமைச்சர்களுடன் தனித்தனியே சந்திப்பையும் நடத்தவுள்ளார்.

பட்ஜெட் 2022 சிறப்பம்சங்கள் – நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன.? வெளிநாட்டு ஊழியர்கள்…

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சரின் சுற்றுப்பயணத்தின் போது, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் பயணம் மேற்கொள்வர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.