தடுப்பூசி போட்டுக்கொண்ட “இந்திய பயணிகளுக்கு தனிமை இல்லா” பயணம் – விமான சேவை குறித்த முழுமையான விவரம்!

(Photo: ET)

VTL Singapore India: தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய விமானப் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்துதல் இல்லாமல் மார்ச் 16 முதல் சிங்கப்பூர் நுழைய முடியும். அதன்படி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதாவது சென்னை, டெல்லி மற்றும் மும்பை மட்டுமல்லாமல் அனைத்து இந்திய நகரங்களையும் உள்ளடக்கியதாக இந்த VTL சேவை விரிவுப்படுத்தப்படும்.

இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய முக்கிய இடங்களில் இருந்து VTL சேவையை விரிவுபடுத்துவதற்கான இந்த நடவடிக்கை பயணத்தை எளிதாக்கும் என்றும் CAAS கூறியுள்ளது.

இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!

திருச்சி- சிங்கப்பூர்

அதன்படி, ஸ்கூட் நிறுவனம் (FlyScoot) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி- சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் வாரத்தில் ஏழு நாட்களுக்கும் VTL மற்றும் Non-VTL தினசரி விமான சேவை வழங்கப்படும்.

அதாவது, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் VTL விமான சேவை வழங்கப்படும்.

மற்ற நான்கு நாட்களில் Non-VTL விமான சேவை வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 27- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வியாபாரம் பெரிசா ஒன்னும் இல்ல… இருந்தாலும் உழைத்து தான் சாப்பிடுவேன்” – 89 வயதிலும் உழைக்கும் Great ஊழியர்!

இந்திய நகரங்கள் உட்பட 66 நகரங்களுக்கு VTL சேவை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் குறைந்த கட்டண விமான நிறுவனமான Scoot ஆகியவை 27 நாடுகளில் உள்ள 66 நகரங்களுக்கு அதன் சேவைகளை விரிவுப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.

அதாவது முழு தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான VTL சேவை வரும் வாரங்களில் விரிவுபடுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 16 முதல் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு VTL சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என அவை தெரிவித்தன.

SIA அசத்தல் அறிவிப்பு

இந்தியா உள்ளிட்ட 40 இடங்களுக்கு அதிரடி சலுகை கட்டணத்தில் விமான சேவைகளை SIA நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட 40 இடங்களுக்கு அதிரடி சலுகை கட்டணம் – SIA அசத்தல் அறிவிப்பு!