VTL விமான டிக்கெட்டு விற்பனை நிறுத்தம் – டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் ஒன்று கூடிய மக்கள்!

(PHOTO: Reuters)

VTL விமானங்களுக்கான புதிய டிக்கெட்டுகளை விற்க நேற்று வியாழன் முதல் ஜன. வரை விமான நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்குப் பிறகு புதன்கிழமை (டிசம்பர் 22) ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) சேவை மையத்தில் நீண்ட வரிசையில் மக்கள் குவிந்தனர்.

வாடிக்கையாளர்களுக்கு 10 நாட்களில் S$140,000 இழப்பு – பொதுமக்களுக்கு OCBC வங்கி எச்சரிக்கை

புதன்கிழமை பிற்பகல் Ion ஆர்ச்சர்டில் உள்ள SIA இன் சேவை மையத்தில் வரிசையில் இருந்தவர்களில் பலர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் மணிக்கணக்கில் வரிசையில் நின்றதாகக் கூறினர்.

SIA விமான நிறுவனத்தின் ஹாட்லைன் உதவி எண்ணில் தொடர்பு கொள்ள சிரமம் ஏற்பட்ட பிறகு மையத்திற்குச் செல்ல முடிவு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அங்கு கூடியிருந்த பலர், டிக்கெட்டுகளை வாங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள டிக்கெட்டுகளை மாற்றி அமைக்கவோ முயன்றனர்.

திரு எல்விஸ் சுவா, 23, என்ற இளங்கலைப் பட்டதாரி, அமெரிக்காவில் இருந்து அடுத்த ஆண்டு திரும்புவதற்கான விமானம் தொடர்பான சில எளிய விளக்கங்களை கேட்க சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பணிப்பெண்ணுடன் அறையில் ஒன்றாக இருந்த வெளிநாட்டு ஊழியர்: கையும் களவுமாக பிடித்த முதலாளி – போலீசில் புகார்