TravelUpdate: VTL திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் கடுமை – மீறினால் நடவடிக்கை

singapore visa removed

Omicron அச்சுறுத்தல் காரணமாக, VTL திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்குள் நுழையும் சிங்கப்பூரர்கள் உட்பட பயணிகள் கடுமையான நடவடிக்கையும் எதிர்கொள்வர்.

VTL திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளும் ஒவ்வொரு நாளும் தங்கள் வேலைக்காக வெளியே செல்வதற்கு முன், சுயமாக ART சோதனையில் நெகடிவ் முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) புதன்கிழமை (டிசம்பர் 22) மீண்டும் வலியுறுத்தியது.

இனி இந்த ஊழியர்களுக்கு 7 நாள் PCR சோதனை முறை, N95 முகக்கவசம் மற்றும் பேஸ் ஷீல்டு கட்டாயம்

அவர்கள் வருகைக்குப் பிறகு மூன்றாம் நாள் மற்றும் ஏழாவது நாளில் மட்டுமே இதற்கு விதிவிலக்கு அளிக்கப்படும், ஏனெனில் பயணிகள் அப்போது சோதனை நிலையத்தில் மேற்பார்வையின்கீழ் சோதனைக்கு உட்பட வேண்டும்.

“பயணிகள் தங்கள் ART சோதனைய முடிவை எடுத்து வைத்துக்கொண்டு, அதை தேவையான நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று MOH கூறியுள்ளது.

அவ்வாறு செய்ய தவறினால் என்ன?

மேற்குறிப்பிட்ட தேவையான சோதனைகளுக்கு உட்படாத மற்றும்/அல்லது தங்கள் முடிவுகளைச் சமர்ப்பிக்காத பயணிகளுக்கு தங்கும் உத்தரவு/வீட்டில் தங்கும் உத்தரவு (SHN) வழங்கப்படும்.

மேலும், அவர்கள் தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் அமலாக்க நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

Omicron கவலைகளுக்கு மத்தியில், VTL டிக்கெட்டுகளின் விற்பனையை டிசம்பர் 23 முதல் ஜனவரி 20 வரை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை சிங்கப்பூர் கடுமையாக்குவதால், பயணிகளுக்கு மேற்கண்ட விதிகளை கடைபிடிக்க MOH நினைவூட்டல் செய்கிறது.

Breaking: VTL விமான, பேருந்து புதிய டிக்கெட் விற்பனை நிறுத்தம்