எச்சரிக்கை பதிவு: சிங்கப்பூரில் தொலைபேசியின் மூலம் பண மோசடி..!

சிங்கப்பூரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வாசகர் ஒருவருக்கு (S pass) IMO செயலியில் அழைப்பு வந்திருக்கிறது. அதில் DBS வங்கியிலிருந்து பேசுவதாகவும், டெபிட் கார்டின் விபரங்களும், OTP-யும் கேட்டு வாங்கிய பிறகு, அவருடைய வங்கி கணக்கிலிருந்து S$1,070 எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் செய்து விட்டு அவர் அதிகாரிகளுடன் வங்கிக்கு சென்ற போது “எக்காரணத்திற்கும் யாரிடமும் OTP எண்ணை கொடுக்காதீர்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : COVID -19: வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதற்கான சிங்கப்பூர் அரசின் விரிவான அணுகுமுறை..!

இதே போல், வாசகர் இன்னொருவரின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மற்றொரு நபரும் (Work permit) S$250 பறிகொடுத்துள்ளார். அது மட்டுமின்றி ஏப்ரல் 30-ம் தேதி மதியம் மற்றோரு நபர் (PR) இது போன்ற நிகழ்வு நடந்ததாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்களில் IMO செயலி பயன்படுத்துவோரின் அழைபேசி எண்களை கொண்டு இந்த சம்பவம் அரங்கேற்றப்படுகிறது, கடந்த இரண்டு வாரங்களாக மிகவும் அதிகமானோர் ஏமாற்றப்பட்டதாக வாசகர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்கள் இது பற்றிய சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வாக இருப்பது மிக முக்கியம், எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை அழைப்பேசி மூலம் கேட்பது யாராக இருந்தாலும் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதயம் படிங்க: அத்தியாவசிய பயணத்தை மீண்டும் தொடங்க 4 நாடுகளுடன் இணைந்து சிங்கப்பூர் செயல்படுகிறது..!