சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமிப்பரவலை அடையாளம் காணக் கழிவுநீர் மாதிரிகள் சோதனை..!

More wastewater testing under way in Singapore to tackle COVID-19
(Photo: NEA, PUB, HTX)

சிங்கப்பூரில் COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தவும் மற்றும் அடையாளம் காணும் நடவடிக்கையாக வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில், கழிவுநீர் மாதிரிகளை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் COVID-19 கிருமித்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், சிங்கப்பூரில் நேற்று ஜூலை 22 நிலவரப்படி உறுதிப்படுத்தப்பட்ட மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 48,744 ஆக உள்ளது.

இதையும் படிங்க : தெம்பனீஸில் நடந்த சண்டையில் ஆயுதத்தால் வெட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது..!

இந்த திட்டம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது, அதனை தொடர்ந்து இதுவரை 30க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் மாதிரிகள் சேகரிப்பது முதல் ஆய்வகங்களில் பணியாற்றுவது வரை சுமார் 20 பணியாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் வோங் தெரிவித்தார்.

தங்கும் விடுதிகளுக்கு அருகில் உள்ள வடிகால்களில் கழிவுநீர் மாதிரிகள் கடந்த இரண்டு மாதங்களாக எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக இரண்டு முதல் மூன்று பணியாளர்களைக் கொண்ட ஒரு குழு, ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு தளங்களுக்கு அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருமி பரவுதல் அறியப்படாத ஒரு தங்கும் விடுதியில், கழிவுநீரில் கிருமிக்கான சாத்தியங்கள் எதுவும் கண்டறியப்படாவிட்டால், அந்த தங்கும் விடுதி தொற்றுநோய்களிலிருந்து மீண்டது என்பதற்கு கூடுதல் உத்தரவாதம் கிடைக்கும் என்று டாக்டர் வோங் கூறியுள்ளார்.

இருப்பினும், தங்கும் விடுதியில் கிருமிக்கான சாத்தியங்கள் கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் அடையாளம் காணவும்,  அவர்களை Swab சோதனை போன்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

அதன்பிறகு, அது பொருத்தமான மருத்துவ சேவையை வழங்க வழிவகை செய்யும், மேலும் எதிர்காலத்தில் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தப்படவும் உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புகைபிடித்த குற்றத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்கு சிறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg