சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – தெரிந்து கொள்வோம்!

(PHOTO: TODAY)

திருமண விழாக்கள், திருமண வரவேற்புகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளுக்கான உச்ச வரம்பு அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கும் என்று சிங்கப்பூரின் கோவிட் -19 பணிக்குழு தெரிவித்துள்ளது.

அதாவது பங்கேற்பாளர்கள் அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

COVID-19 தடுப்பூசி திட்டம் தற்போது 45 முதல் 59 வயதுடையவர்களுக்கு துவக்கம்

நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக COVID-19 தடுப்பூசி இரண்டு முறை போட்டுக் கொண்ட பங்கேற்பாளர்கள் பரிசோதிக்கப்பட வேண்டியதில்லை என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

ஏப்ரல் 24 முதல், திருமண விழாக்களுக்கான வரம்பு 100லிருந்து 250 பங்கேற்பாளர்களாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்பாளர்கள் தலா 50 பேர் வரை கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட வேண்டும் என்று பணிக்குழுவின் இணைத் தலைவரான கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.

அந்த உச்ச வரம்பில் திருமண ஜோடியும் அடங்கும், ஆனால் உரிமம் பெற்ற அலங்காரம் மற்றும் உணவு ஏற்பாடு செய்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், 100 அல்லது அதற்கும் குறைவான பங்கேற்பாளர்கள் இருந்தால், நிகழ்வுக்கு முந்தைய பரிசோதனை தேவையில்லை.

S$93 மில்லியன் மின்னிலக்க நாணயத்தை பயன்படுத்தி கலைப்படைப்பை வாங்கிய தமிழர்..!