‘திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவை’- அறிவிப்பை வெளியிட்டது ‘FlyScoot’ நிறுவனம்!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் அரசின் கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) கீழ் சிங்கப்பூர், இந்தியா இடையேயான விமான சேவை வரும் நவம்பர் 29- ஆம் தேதி தொடங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சிங்கப்பூர் சுகாதாரத்துறையின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா-சிங்கப்பூர் பயணிகள் வணிக விமான சேவை: நெருக்கமாகப் பணியாற்றி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், FlyScoot, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இந்தியா, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் அதிகளவில் விமானங்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், ஸ்கூட் (FlyScoot) விமான நிறுவனம் நேற்று (23/11/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான சேவை வரும் டிசம்பர் 2- ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இவ்வழித்தடத்தில் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு விமானங்கள் இயக்கப்படும். அதன்படி, வியாழன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும். TR 564 என்ற விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும், TR 565 என்ற விமானம் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும் இயக்கப்படும். இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பயண அட்டவணை, பயண டிக்கெட் முன்பதிவு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற இணையதளத்தை அணுகலாம்.

சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் மலேசிய நாட்டு கடற்படை தளபதி சந்திப்பு!

அதேபோல், ஹைதராபாத், சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் விமான சேவை வரும் நவம்பர் 30- ஆம் தேதி தொடங்குகிறது. TR 574 விமானம் சிங்கப்பூரில் இருந்து ஹைதராபாத்திற்கும், TR 575 விமானம் ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூருக்கும் இயக்கப்படும். இதற்கான, டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 475 நாட்களுக்குப் பிறகு சிங்கப்பூர், திருச்சி இடையே இரு மார்கத்திலும் ‘FlyScoot’ நிறுவனம் விமான சேவையை மீண்டும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போதையில் பேருந்துகளைத் தாக்கிய நபருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை!

‘FlyScoot’ விமான நிறுவனத்தின் தாய் நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்பது நினைவுக்கூறத்தக்கது.