வெஸ்ட் கோஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 160 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

Photo: SCDF

 

சிங்கப்பூரில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் (West Coast) பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான புளாக் 511 அடுக்குமாடி குடியிருப்பில், மே 20- ஆம் தேதி அன்று இரவு 11.15 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும், காவல்துறையினருக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்கள்… Work pass வேலை குளறுபடி – 27 பேர் அதிரடி கைது

இதையடுத்து, தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்புக் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிளமெண்டி தீயணைப்பு நிலையத்தின் வீரர்கள், அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததைக் கண்டனர். இதையடுத்து, 12வது மாடியின் படுக்கையறைக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், அந்த அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சுமார் 160 குடியிருப்பாளர்கள் தாங்களாகவே வெளியேறினர். மேலும், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் வசித்து வந்த ஆறு பேரும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே வெளியேறினர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வடிகாலில் பாய்ந்த கார் – மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தில் பெண் கைது

படுக்கையறையில் மின் சைக்கிளுக்கு சார்ஜிங் செய்யப்பட்டு இருந்ததாகவும், மின்கலனில் தீப்பிடித்துக் கொண்டதால், அது அறை முழுவதும் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மின் சைக்கிள்கள், தனிநபர் நடமாட்ட சாதனங்கள் ஆகியவற்றின் மின்கலன்களுக்கு நீண்ட நேரம் சார்ஜிங் செய்ய வேண்டாம் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.