சாலைகளில் விலங்குகளை கண்டறியும் அமைப்பு – ரைபிள் ரேஞ்ச் சாலை வரை நீட்டிக்கப்படும்

System which alerts drivers to wildlife crossing roads
System which alerts drivers to wildlife crossing roads (NParks)

சாலைகளில் விலங்குகளை கண்டறியும் அமைப்பு முறை ரைபிள் ரேஞ்ச் சாலை (Rifle Range Road) வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை, Jane Goodall நிறுவனம் (சிங்கப்பூர்) ஏற்பாடு செய்த இயற்கை மற்றும் பாதுகாப்பு குறித்த உரையாடல் அமர்வின்போது தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ பகிர்ந்து கொண்டார்.

சிங்கப்பூரில் கனமழை: திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு – இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

Roadway Animal Detection System (RADS) எனப்படும் இந்த விலங்குகளை கண்டறியும் அமைப்புமுறை, 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓல்ட் அப்பர் தாம்சன் சாலையில் தேசிய பூங்கா வாரியத்தால் (NParks) முதலில் செயல்படுத்தப்பட்டது.

மனித-வனவிலங்குகளுக்கு ஏற்படும் போக்குவரத்து விபத்துக்களைக் குறைக்க, சாலையில் ஏதேனும் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதை வாகன ஓட்டிகளுக்குத் தெரிவிக்க இந்த அமைப்பு உதவுகிறது.

இந்த அமைப்பு, விலங்குகளைக் கண்டறிவதில் கிட்டத்தட்ட 100 சதவீத துல்லிய விகிதத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

“தமிழக தென்மாவட்டங்களுக்கும் விமானம் வேண்டும்”…மதுரை-சிங்கப்பூர் இடையே சேவை தொடங்க வலுக்கும் கோரிக்கை