இணையம் வழியாக போலி தெர்மோமீட்டர் விற்பனை – பெண் கைது

Singapore Police Force

சிங்கப்பூரில் போலி தெர்மோமீட்டர்களை இணையம் வழியாக விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் 33 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Bedok Reservoir View மற்றும் Potong Pasir அவென்யூ 1 ஆகிய இடங்களில் போலீஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட வர்த்தக முத்திரை சட்டத்தை மீறும் தெர்மோமீட்டர்கள் மற்றும் probe கவர்ஸ் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

VTL திட்டத்தில் 3 நாடுகளுடனான பயண ஏற்பாட்டை ஒத்திவைத்த சிங்கப்பூர்

இதில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு S$14,000க்கும் அதிகமாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

போலியான தெர்மோமீட்டர்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றதாகவும், அதனை இணையத்தின் வழியாக விற்பனை மேற்கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன.

போலியான வர்த்தக முத்திரையுடன் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விநியோகித்தல் ஆகியவற்றில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் S$100,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூர் – மலேசியா இடையேயான விமானம் மற்றும் நிலவழி VTL சேவைகள் தொடக்கம்