Prinsep Street அருகே ஓடும் காரில் ஒருவர் தொங்கி சென்ற வீடியோ வைரல் – பெண் கைது

சிங்கப்பூரில் Prinsep Street அருகே ஓடும் காரில் பெண் ஒருவர் தொங்கி கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது.

இதனை அடுத்து, மோசமான இந்த செயலுக்காக வீடியோவில் காணப்பட்ட 36 வயதான பெண் கைது செய்யப்பட்டார்.

“சிறந்த வேலை, அதிக சம்பளம்” என்ற ஆசை வார்த்தைக்கு ஏமாந்துபோன தமிழக ஊழியர் – ரூ. 1 லட்சத்தை இழந்த பரிதாபம்

இந்த சம்பவம் குறித்து கடந்த மார்ச் 7 அன்று இரவு 11.15 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இதில் 47 வயதுடைய ஆடவர் ஒருவரும் விசாரணையில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியான டாஷ்போர்டு வீடியோ காட்சிகளில் வெள்ளை மேலாடை அணிந்த பெண் ஒருவர் சாலையில் செல்லும் கருப்பு நிற காரை துரத்தி அதை பற்றிக்கொள்வதையும் காணமுடிகிறது.

அந்த கார் Dhoby Ghaut அருகே உள்ள பிரின்செப் ஸ்ட்ரீட்டின் வழியே திரும்புவதையும் வீடியோவில் காண முடிகிறது.

இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடும் நபர்களின் குற்றம் நிரூபனமானால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, S$2,500 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த ஊழியர்… திருச்சி விமான நிலையத்தில் கைது – போலீசில் ஒப்படைப்பு