உட்லண்ட்ஸில் விபத்து: சாலையில் கிடந்த பெண்… விரைந்து வந்து உதவிய SCDF

Woodlands junction accident

உட்லண்ட்ஸில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (செப்டம்பர் 22) 60 வயதான பெண் ஒருவர் PMD சாதனம் தொடர்பான விபத்தில் சிக்கினார்.

இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் என்ன அந்தக்கால அடிமைகளா? “சக மனிதர்களை இப்படியா நடத்துவது”… வெகுண்டெழுந்த பெண்

அன்று மாலை 6.15 மணியளவில் உட்லண்ட்ஸ் அவென்யூ 4 மற்றும் உட்லண்ட்ஸ் அவென்யூ 7 சந்திப்பில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக SCDF கூறியது.

விபத்தை அடுத்து மீட்கப்பட்ட அந்த பெண் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.

​​PMD மற்றும் இரண்டு பாதசாரிகள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

61 வயதுடைய நபர் ஒருவர் போலீசாரின் விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.

லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய இளைஞர்: போலீசை கண்டதும் தப்பியோட்டம் – மடக்கி பிடித்த போலீஸ்