உட்லண்ட்ஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழப்பு!

Photo: Lianhe Zaobao reader

டிசம்பர் 16- ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் கிராஞ்சி விரைவுச் சாலையை (Kranji Expressway) நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ் சாலையில் (Woodlands Road) ஒரு காரும், ஒரு வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து, அன்றைய தினம் மாலை 04.30 PM மணிக்கு சிங்கப்பூர் காவல்துறைக்கும் (Singapore Police Force), சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினருக்கும் (Singapore Civil Defence Force) தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த நேரத்தில் மழை பெய்துள்ளது.

சிங்கப்பூர் அமைச்சருக்கு விருந்து வைத்து அசத்திய தமிழக அமைச்சர்!

இதையடுத்து, சம்பவ நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், வேனை ஓட்டி வந்த 61 வயது பெண் ஓட்டுநரையும், கார் ஓட்டி வந்த 27 வயது ஆண் ஓட்டுநரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு (Ng Teng Fong General Hospital) அனுப்பி வைத்தனர்.

இதில், ஆண் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவின்றி இருந்ததாகவும், பின்னர் அவர் இறந்துவிட்டதாகவும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நாமக்கல் முட்டைகள்!

இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதேபோல், வேனின் வலதுபுறம் சேதமடைந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.