பிளாட்டின் 10வது மாடியில் இருந்து விழுந்த இளம் பெண்…

woodlands teen falls
(PHOTO: Google Streetview)

சிங்கப்பூரில் உட்லேண்ட்ஸ் HDB பிளாட்டின் 10வது மாடியில் இருந்து 19 வயது பெண் ஒருவர் விழுந்ததை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த டிசம்பர் 28 அன்று பிளாக் 437 உட்லேண்ட்ஸ் ஸ்ட்ரீட் 41இல் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்தனர். அந்த பெண் அதிகாலை 5 மணியளவில் பிளாட்டில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

நடைபாதையில் திடீரென பாய்ந்த கார்…பாதசாரி இருவரை தாக்கியது – ஓட்டுநர் கைது

அவர், கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், அப்போது சுயநினைவாகவும் இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் அந்த இளம் பெண் மனநலம் (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) சட்டத்தின் பிரிவு 7இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி 65 வயதான குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில்; பெரிய சத்தம் ஒன்று கேட்டதாகவும், காவல்துறை கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவை பிளாக்கின் கீழே காணப்பட்டதாகவும் கூறினார்.

பெண் விழுந்த இடத்திற்கு அருகில் தரையில் ஒரு மூங்கில் மர கம்பும் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன் கீழ் தளங்களில் அமைந்துள்ள மூங்கில் கம்பம், அவர் விழுந்ததில் உடைந்ததாக நம்பப்படுகிறது.

அதன் மூலம் அவர் உயிர் பிழைத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

பலத்த காயத்துடன் அந்த பெண் நன்றாக உள்ளதை உணரமுடிவதாக, Lianhe Zaobao சீன நாளிதழ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கியது…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…