வெளிநாட்டு ஊழியரின் உயிர் காக்க உதவுங்கள்: வேலையிடத்தில் விபத்து… ஆபத்தான நிலையில் ஊழியர் – உறவுகளை தேடும் நிறுவனம்

worker need life support employer urgently looking for his next of kin
(Google Maps)

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளதாக தகவல் வந்துள்ளது.

அவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (SGH) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

ஒர்க் பெர்மிட்டில் கட்டுமான ஊழியராக வந்த தமிழர்… தற்போது “சிங்கப்பூர் குடிமகன்” – திருப்பு முனையாக அமைந்த ஒரு சம்பவம்

வேலையின் போது கீழே விழுந்ததில் அவருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் அவரின் உறவினர்கள் குறித்த ஒரு விவரமும் தெரியாத காரணத்தால் அவரை வேலைக்கு அமர்த்திய துப்புரவு நிறுவனம் அவரின் உறவினரைத் தேடி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து நேற்று சனிக்கிழமை (ஜூலை 29) ஸ்டாம்ப் வாசகர் ஒருவர் அந்த செய்தி தளத்திற்கு தெரிவித்தார்.

ஊழியரின் பெயர் லீ கோங் ஃபூ என்று முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.

அவர் வேலை செய்யும் போது கீழே விழுந்தார் என்றும், பின்னர் அவர் SGHக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் ஸ்டாம்ப் வாசகர் தெரிவித்தார்.

அவருக்கு மூளையில் இரத்தப்போக்கு இருப்பதாகவும் உயிரை காப்பற்ற உதவி தேவை என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

தற்போதைய தகவலின்படி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதகவும், மிகவும் ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாகவும் ஸ்டாம்ப் வாசகர் கூறியுள்ளார்.

ஸ்டாம்ப் வாசகரின் நண்பர் நிறுவனத்தில் அவர் பாத்திரங்கழுவும் வேலை செய்து கொண்டிருந்தார் என்றும், என் நண்பர் தான் அந்நிறுவனத்தின் முதலாளி என்றும் வாசகர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர் நிறுவனத்திற்கு வழங்கிய விவரங்களில் பிலிப்பைன்ஸில் உள்ள அவரது மனைவி தொடர்பான விவரங்களை கொடுத்துள்ளதாகவும், ஆனால் கொடுக்கப்பட்ட விவரங்களை வைத்து மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

திரு லீயை பற்றி உங்களுக்குத் தெரிந்தால், 9228 4107 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Stomp

அப்டேட்:

பதிவு வெளியான பிறகு, அவரின் மனைவி தொடர்பு கொண்டார் என்றும், ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் அவரால் சிங்கப்பூருக்கு வர முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊழியருக்கு சிங்கப்பூரில் உடன்பிறப்புகள் இருப்பதாக மனைவி கூறினார், ஆனால் அவர்களின் தொடர்பு எண்கள் அல்லது விவரங்கள் குறித்து அவருக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

இந்த பதிவை ஷேர் செய்து ஆபத்தான நிலையில் உள்ள ஊழியரின் உயிரை காக்க உதவலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

பாலியியல் தொழில்… 200க்கும் மேற்பட்டோரை மடக்கி பிடித்த போலீஸ்