வெளிநாட்டு ஊழியர் தற்கொலை… மனிதவள அமைச்சகம் விசாரணை..!

Worker suicide MOM investigating
MOM investigating firm after ex-employee committed suicide allegedly due to harsh working conditions

சமூக ஊடகங்களில் வைரலான பதிவு ஒன்றில், முன்னாள் ஊழியர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், பணியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த தற்கொலை தொடர்பாக, அவரின் முன்னாள் முதலாளியிடம் மனிதவள அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சிங்கப்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ… 20 பேர் வெளியேற்றம்!

பேஸ்புக் பதிவு

இந்த தற்கொலை குறித்து, அவருடன் வேலை பார்த்த மற்றொரு முன்னாள் ஊழியர் எழுதிய பேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களை சுற்றி வந்தது.

அந்த பதிவில், தற்கொலை செய்த அந்த ஊழியர் ஒரு இளம் மலேசியப் பெண் ஊழியர் என்றும், அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடர்ச்சியான கொடுமைப்படுத்துதல் மற்றும் அவமானங்களை எதிர்கொண்ட பின்னர், தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தற்கொலை குறிப்பு

பேஸ்புக் பதிவில் தற்கொலை குறிப்பும் இருந்தது, அதில் தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் தாய்க்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளாதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த குறிப்பில், அந்த பெண் திடீரென வருமான இழப்பு, வேலையில் துன்புறுத்தல் மற்றும் நிறுவனத்தில் பணிபுரிந்த நான்கு மாதங்களில் அவர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றால் அவர் சந்தித்த சுமைகளை பற்றி அதில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஊழியர் புகார் செய்யவில்லை

கடந்த ஆண்டு டிசம்பரில் இறப்பதற்கு முன்னர், அந்த ஊழியர் எந்த ஒரு புகாரும் இது தொடர்பாக கொடுக்கவில்லை என்று மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 29 அன்று, அவரது தாயார் அமைச்சிடம் புகார் கொடுத்துள்ளார்.

நிறுவனம் மறுப்பு

இந்நிலையில், இது தொடர்பான பணியிட கொடுமைப்படுத்துதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளை நிறுவன இயக்குனர் மறுத்துள்ளார்.

கொரோனா: இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் பாதிப்பு!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…