கொரோனா: இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் பாதிப்பு!

(PHOTO: AFF/ Roslan Rahman)

சிங்கப்பூரில் நேற்றைய (நவ. 23) நிலவரப்படி, புதிதாக 5 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில், மோசடி SMS அல்லது Call தொல்லையா? பாதுகாப்பு செயலி அறிமுகம்!

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

அவர்களில் ஒருவர் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்.

மேலும், 3 பேர் இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த வேலை அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள்.

கடைசி நபர், பிரான்ஸிலிருந்து சிங்கப்பூர் வந்த குறுகிய கால அனுமதியில் வேலை செய்பவர்.

தனிமை

அவர்கள் இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மொத்த பாதிப்பு

இந்த புதிய பாதிப்புகளுடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,165ஆக உள்ளது.

சமூக பரவல் இல்லை

சிங்கப்பூரில் தொடர்ந்து 13வது நாளாக சமூக பரவல் மற்றும் தங்கும் விடுதிகளும் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரிலிருந்து சென்னை, கோவை, திருச்சி செல்லும் விமானங்கள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…