தொல்லை தரும் முதலாளியிடம் வேலை செய்வது கசப்பானது.. அனைவரையும் வியக்கவைத்த ஊழியரின் கெத்து சம்பவம்

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

தொல்லை தரும் முதலாளியிடம் வேலை செய்வது என்பது ஒரு துரதிர்ஷ்டவசமான அனுபவமாக இருக்கும், இது நம்மில் பெரும்பாலோர் அனுபவித்த ஒரு கசப்பான நிகழ்வாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மலேசியப் பெண் ஊழியர் ஒருவர் அதுபோன்ற முதலாளியுடன் அவர் சந்தித்த சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது, வேலைக்கு உறுதிப்படுத்தப்பட்ட அதே நாளில் ராஜினாமா செய்யும் அளவுக்கு முதலாளி முரட்டுத்தனமாக நடத்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டு ஊழியர்.. மடக்கி பிடித்த அதிகாரிகள்

எட் என்ற அந்த பெண் ஊழியர், ட்விட்டரில் anonymous கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது இதனை விளக்கி கூறினார்.

அதாவது, தன் மேலாளர் சத்தம் போட்டதாகவும், இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.

ஒரு கட்டத்தில், மேலாளரின் கார் டயர் பழுதடைந்ததால், தன்னை அழைத்துச் செல்லும்படி பெண்ணிடம் அவர் கூறினார்.

வீட்டுக்கு வழி தெரியாத காரணத்தால் அவரை அழைப்பதில் தாமதமாகிவிட்டது என்றும், அதற்கு அவர் என்னை முட்டாள் என்று தகாத வார்த்தையால் திட்டி சத்தம் போட்டதாகவும் அவர் கூறினார்.

இதனை அடுத்து அடுத்த நாளே அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதனால் மேலாளர் அதிர்ச்சி அடைந்ததாகவும், அதைப்பற்றி ஊழியர் கவலைப்படாமல் வேறு வேலைக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$5.8 மில்லியன் ஹிமாலய பரிசை தட்டி சென்ற ஒரே ஒருவர்!