சம்பளக் குறைப்பு காரணமாக 35 முதல் 44 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் கடுமையாக பாதிப்பு..!

(Photo: DBS)

சிங்கப்பூரில், 35 முதல் 44 வயதுக்கு உட்பட்ட ஊழியர்கள் கோவிட் -19 தொற்று காரணமாக பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இந்த மோசமான பொருளாதார சூழ்நிலை அவர்களின் சம்பளத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று DBS குறிப்பிட்டுள்ளது.

இந்த ஊழியர்களில் கால்வாசிக்கும் அதிகமானோரின், சமீபத்திய மாதங்களின் வருமானம் குறைந்து வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஊழியர்களை ஆள்குறைப்பு செய்யவுள்ள சிங்கப்பூர் SPH..!

அவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்களின் (56 சதவீதம்) வருமானம் 30 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளதாக DBS வங்கி தெரிவித்துள்ளது.

இதில் 25 முதல் 70 வயதுக்கு உட்பட்ட 1.2 மில்லியன் சில்லறை வாடிக்கையாளர்கள் DBS வங்கியை தங்கள் முக்கிய சம்பள வரவு வங்கியாக பயன்படுத்துகின்றனர் என்று அது தெரிவித்துள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்கள், அதாவது மாதத்திற்கு $3,000க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் என்றும், சம்பள குறைவை சந்தித்த வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் அதில் உள்ளனர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த குழுவில், சுமார் 51 சதவீத நபர்களின் வருமானம் பாதிக்கும் மேலாக குறைந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 26 சதவீத வாடிக்கையாளர்களின் வருமானம், மார்ச் மாதத்தில் 15 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, மே மாதத்தில் 10 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலை ஆதரவுத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg