“மீண்டும் தனிமைப்படுத்தப்படுவது சோகம் மற்றும் கவலை அளிக்கிறது” – தங்கும் விடுதி ஊழியர்கள்

(Photo: Ooi Boon Keong/TODAY)

வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்கும் விடுதியின் பிளாக் Aஇல் வசிக்கும் சுமார் 1,000க்கும் மேற்பட்டவர்கள், நேற்று முன்தினம் டஜன் கணக்கான பேருந்துகளில் 14 நாட்கள் அரசாங்க தனிமைப்படுத்தல் வசதிகளுக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த ஆண்டின் பெரும்பகுதி அந்த விடுதியின் அறையில் அடைத்து வைக்கப்பட்ட அவர்களில் ஒருவரான, திரு சிக்தர் ஆசாத் என்ற ஊழியர் இறுதியாக சாதாரண வாழ்க்கைக்குச் திரும்பியதாக நினைத்து கொண்டிருந்தார்.

ஆனால், மீண்டும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது கவலை அளிப்பதாக Todayவிடம் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் சுமார் 900 வேலையிடங்கள் ஆய்வு – 10 நிறுவனங்களுக்கு அபராதம்…!

கவலை

“மீண்டும் வேலைகளைச் செய்வோம், அதனால் குடும்பங்களை மீண்டும் கவனித்துக் கொள்ள முடியும்” என்று பங்களாதேஷைச் சேர்ந்த 36 வயதான வெளிநாட்டு ஊழியர் சிக்தர், தான் நினைத்ததைப் பற்றி கவலையுடன் கூறியுள்ளார்.

ஆனால், அவரது நம்பிக்கை குறுகிய காலம் கூட தாக்குபிடிக்கவில்லை, அவர்கள் மீண்டும் 14 நாட்கள் அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தனிமைக்கு மீண்டும் திரும்புவதற்கான எண்ணம் அவரை கவலையடையச் செய்துள்ளது, திரு சிக்தர் வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் தொலைபேசியில் Todayவிடம் அதனை தெரிவித்தார். அப்போது அவர் பேருந்தில் ஏற வரிசையில் காத்திருந்தார்.

ரமழான் மாதம்

“இது தங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ரமழான் மாதத்தில் மீண்டும் பணியாற்றுவோம், அதே போல தொழுகைகளை மீண்டும் ஒன்றாகச் செய்வோம் என்று நினைத்தோம்.”

“ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை, மீண்டும் தனிமைப்படுத்தலுக்குச் செல்கிறோம்,” என்று திரு சிக்தர் கூறினார்.

அவர் சிங்கப்பூரில் 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தங்குமிடத்தில் வசித்து வருகிறார்.

சம்பளம் குறைக்கப்படும் என்ற அச்சம்

இது தொடர்ந்து நடந்தால், அதாவது ஆறு மாதங்கள் உள்ளே, பின்னர் ஆறு மாதங்கள் வேலை, பின்னர் மீண்டும் உள்ளே, இந்த நிலை நிச்சயமாக சோகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, திரு சிக்தர் தனது சம்பளம் குறைக்கப்படும் என்று பயப்படுகிறார்.

ஏனெனில், அவர் கடந்த ஆண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

கட்டுமானத் தளத்தில் இயந்திரத்தின் ஒரு பகுதி விழுந்ததில் வெளிநாட்டு ஊழியர் மரணம்