நிறுவனங்களில் கிட்டத்தட்ட 140 வேலையிட பாதுகாப்பு விதி மீறல்கள்…

(Photo: Ministry of Manpower)

அமலாக்க நடவடிக்கையின் போது கழிவு மறுசுழற்சி நிறுவனங்களில்  கிட்டத்தட்ட 140 வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார (WSH) விதி மீறல்கள் கண்டறியப்பட்டதாக மனிதவள அமைச்சு (MOM) கூறியுள்ளது.

Ops Bowerbird என அழைக்கப்படும் இந்த சோதனை, சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையின் (SCDF) ஆதரவுடன் கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

(Photo: Ministry of Manpower)

அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் லீ.

நிறுவனங்கள்

இந்த சோதனை நடவடிக்கையின் போது சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வாளர்கள் 140 விதிமீறல்களை கண்டுபிடித்தனர், அதில் தீ மற்றும் வெடிப்பு அபாயங்கள் கண்டறியப்பட்டன.

மோசமாக பாதுகாப்பு நடவடிக்கை

மேலும் எரியக்கூடிய / நச்சு வாயுக்கள் கொண்ட கொள்கலன்களை மோசமாக முறையில் கையாளுதல் மற்றும் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற மீறல்கள் கண்டறியப்பட்டதாக அமைச்சகம் பேஸ்புக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

(Photo: Ministry of Manpower)

கூடுதலாக, பாதுகாப்பற்ற முறையில் குவியலிடுதல், பாதுகாப்பற்ற மின் வயரிங், மோசமான ஃபோர்க்லிஃப்ட், பாதுகாப்பற்ற இயந்திர பாதுகாப்பு மற்றும் மோசமான பராமரிப்பு போன்ற மீறல்களும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சிறந்த நிறுவனங்கள்

சில நிறுவனங்கள் நல்ல வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை செயல்படுத்தியுள்ளதாகவும் MOM குறிப்பிட்டுள்ளது.

MOM நினைவூட்டல்

விழிப்புணர்வைப் தொடர்ந்து ஏற்படுத்தவும், ஊழியர்களைப் பாதுகாக்க தேவையான பாதுகாப்புகளை உறுதிப்படுத்தவும், அனைத்து நிறுவனங்களுக்கும் MOM நினைவூட்ட விரும்புவதாக தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட S$2 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…