உலகின் விலை உயர்ந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர், சூரிச் முதலிடம்!

Photo: Wikipedia

 

உலகின் விலை உயர்ந்த நகரங்களின் பட்டியல் மற்றும் அது தொடர்பான ஆய்வறிக்கையை எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (Economist Intelligence Unit- ‘EIU’) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. மக்கள் விரும்பி செல்லக் கூடிய நகரங்களின் ஒன்றான சிங்கப்பூர் மற்றும் ஸ்விட்சர்லாந்த் நாட்டின் சூரிச் (Zurich) ஆகிய இரண்டு நகரங்களும் உலகின் விலை உயர்ந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து கோவை: கடத்தல் நடவடிக்கை.. பெட்டியை போட்டுவிட்டு எஸ்கேப் – சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணை

ஜெனீவா மற்றும் நியூயார்க் நகரங்கள் மூன்றாவது இடத்திலும், ஹாங்காங் ஐந்தாவது இடத்திலும், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த ஆய்வு அறிக்கையை 11 ஆண்டுகளாக எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ள நிலையில், ஒன்பதாவது முறையாக உலகின் மிக விலை உயர்ந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்குறைப்பு நடவடிக்கையில் பிரபல மதுபானத் தயாரிப்பு நிறுவனம்….அதிர்ச்சியில் ஊழியர்கள்!

உலகின் மிக அதிகமான போக்குவரத்துக் கட்டணங்களை சிங்கப்பூர் கொண்டுள்ளது அதேபோல், சிங்கப்பூரில் ஆடைகள் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.