தோ பாயோ சென்ட்ரலில் விதிமீறல்களை கண்டறிய கண்காணிப்பு ரோபோக்கள் நிறுத்தம்

Photo: HTX

அதிக போக்குவரத்து உள்ள பகுதியில் ரோந்து மற்றும் ஆய்வு பணியை மேற்கொள்ள ரோபோக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, HTX (வீட்டு குழு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு), தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு, நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் உணவு அமைப்பு மற்றும் வீடமைப்பு வளர்ச்சி கழகம் ஆகிய ஐந்து பொது அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டுத் திட்டமாகும்.

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய நபர்களுக்கு உதவி – ஆய்வாளர் பணியிடை நீக்கம்

இந்த HTX ரோபோட், தோ பாயோ சென்ட்ரலில் ரோந்து பணியை மேற்கொள்ள இன்று செப். 5 முதல் மூன்று வார காலத்திற்கு நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சேவியர் (Xavier) என்றழைக்கப்படும் இந்த ரோபோக்கள், பொது இடத்தில் தேவையற்ற தொல்லை உண்டாக்கக் கூடிய சமூக நடத்தைகளை கண்டறிய தன்னிச்சையாக செயல்படும்.

  • தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைப் பிடித்தல்
  • சட்டவிரோத விற்பனை (hawking)
  • HDB மையத்தில் தவறாக நிறுத்தப்படும் சைக்கிள்கள்
  • ஐந்துக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம்
  • நடைபாதையில் மோட்டார் பொருத்தப்பட்ட சாதனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்துதல்

ஆகிய தவறுகள் பொது இடங்களில் நடந்தால் அது கண்டறிந்து, கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கொடுக்கும்.

மதுரை, கோவையில் இருந்து “உடான்” திட்டத்தில் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்க திட்டம்