யுஷுனில் 3 வாகன விபத்து: சிறுமி உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதி

Yishun carpark accident
SHIN MIN DAILY NEWS

யுஷுனில் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இரண்டு பெண்கள் மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று நவ.01 பிற்பகல் 2.45 மணியளவில் இரண்டு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு பாதசாரிகள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் இன்று தெரிவித்தனர்.

DBS வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி – சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் அதிகரிப்பு

இதில் விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர், 31 வயதுடைய பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயமடைந்த இன்னொரு பெண் 64 வயதான பாதசாரி ஆவார்.

இவர்கள் மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவுடன் இருந்தனர்.

காயமடைந்தவர்களில் இருவர் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கும் மற்றவர் Khoo Teck Puat மருத்துவமனைக்கும் கொண்டு சென்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

உரிமம் இல்லாமல் 2.2 மில்லியன் மாஸ்க் உற்பத்தி – நிறுவனத்திற்கு S$10,000 அபராதம்