மேற்கூரை பலகை தலையில் விழுந்து பெண்ணுக்கு ரத்தம் வழிந்தோடியது – நெட்டிசன்கள் அதிர்ச்சி

யிஷுனில் உள்ள இணைப்புப்பாதை கூரையின் பலகை விழுந்ததில் 52 வயதான பெண்மணி ஒருவர் தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் Yishun Street 22 இன் பிளாக்ஸ் 272 மற்றும் 275 க்கு இடையேயான இணைப்பு பாதையில் கடந்த செவ்வாய்கிழமை (மார்ச் 1) மதியம் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

S Pass, EP தகுதிச் சம்பள உயர்வு…. உள்ளூர் ஊழியர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்குமா?

அந்த பலகை விழுந்த நேரத்தில், வானிலை நன்றாக இருந்ததாகவும், மழை பெய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

அம்மாவின் கழுத்தில் ரத்தம் வழிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் 23 வயது மகன், ஆம்புலன்ஸை அழைத்தார். பின்னர், அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பலகை குறித்து குடியிருப்பாளர்கள் பல முறை புகார் செய்ததாகவும், வந்து சோதனை செய்த அதிகாரிகள் எல்லாம் நன்றாக உள்ளதாக கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை மதியம் அப்பெண் குணமடைந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில், நகரமன்ற உறுப்பினர்கள் அவரைச் சென்று பார்த்ததாகத் தெரிகிறது.

இது குறித்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் பலர் கருத்து தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

சிலர் நினைத்தவுடன் வெளிநாடுகளுக்கு பக்கத்து ஊருக்கு சென்று வருவது போல சென்று வருகிறார்களே, அது எப்படி..?