ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி சாதனை – ஒரே ஆண்டில் 6வது முறையாக சாதித்த சிங்கப்பெண்

Shanti Pereira breaks national record again with 100m gold at Asian Athletics Championships
Photo: Singapore Athletics Instagram

சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா (Shanti Pereira), ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெறும் 11.20 வினாடிகளில் எல்லையை கடந்து சாந்தி சாதனை படைத்தார்.

சிங்கப்பூரில் மேலும் ஒரு இந்திய ஊழியர் மரணம் – சாங்கி ஈஸ்ட் கட்டுமான தளத்தில் விபத்து

இந்த ஆண்டில் 6வது முறையாக பதக்கம் வென்று அவர் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில், ஆசிய ஒட்டப்பந்தைய போட்டியாளர்கள் இதுவரை பதிவு செய்யாத சாதனையை அவர் நிகழ்த்தி காட்டினார்.

இதற்கு முந்தைய சாதனையாக சீனாவின் வெய் யோங்லி 11.24 வினாடிகள் ஓடி இருந்தார். அது கடந்த ஜூன் மாதம் பதிவானது.

சுபச்சலசாய் தேசிய மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் அவர், ஈரானின் ஃபர்சானே ஃபசிஹி (11.39 வினாடிகள்) மற்றும் சீனாவின் ஜி மான்கி (11.40 வினாடிகள்) ஆகியோரை வீழ்த்தினார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“உழைப்புக்கு ஏற்ற கூலி முக்கியம்ங்க..” – கடமைக்கு வேலை செய்யும் ஊழியர்கள் சிங்கப்பூரில் தான் அதிகமாம்