சிங்கப்பூரில் மேலும் 193 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை..!

193 more migrant worker dormitories cleared of COVID-19: MOM
193 more migrant worker dormitories cleared of COVID-19: MOM (Photo: Roslan Rahnam/AFP via Getty Images)

சிங்கப்பூரில் மேலும் 193 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை என்று மனிதவள அமைச்சு (MOM) செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) கூறியுள்ளது.

இதில் 170 தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் 22 தற்காலிக கட்டுமான தங்கும் வசதிகள் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க : மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு துப்பாக்கி கடத்தல் – இருவருக்கு சிறை மற்றும் அபராதம்..!

இதன் மூலம் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட தங்கும் விடுதிகளின் மொத்த எண்ணிக்கை 818 ஆக உயர்ந்துள்ளது.

திங்கள்கிழமை நிலவரப்படி, சுமார் 215,000 ஊழியர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை அல்லது அதிலிருந்து மீண்டுவிட்டனர்.

அவர்களில் சிலர் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை என்றும், வேலையை தொடங்குவதற்கு முன் பொருத்தமான தங்குமிடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் தினசரி வேலைக்குச் செல்லும்போது புதிய தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க, தங்கும் விடுதி நிர்வாகிகள், முதலாளிகள், ஊழியர்கள் ஆகிய அனைவரும் மூன்று கட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டும் என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான தங்குமிடங்கள் ஒரு வாரத்தில் அல்லது அதற்கும் குறைவாக அந்த நடவடிக்கைகளை முடித்தன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து 12 வெளிநாட்டினர் நாடு கடத்தல் – மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg