ஸ்காட்லாந்தில் சிக்கிக்கொண்ட சிங்கப்பூர் மாணவி – COVID-19 சிகிச்சைகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபாடு..!

Singaporean student locked down in Scotland got involved in researching COVID-19 treatments
(Photo: Giam Yan Hui)

சிங்கப்பூரை சேர்ந்த இளம் பெண், ஸ்காட்லாந்தில் COVID-19 தொற்று தொடர்பான சிகிச்சை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கியாம் யான் ஹுய் ( 24 வயது) என்ற இளம் பெண் கடந்த 2013ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உயிர்மருத்துவத் துறை மாணவியாக சேர்ந்தார்.

இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் 2 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள்…!

டிப்ளோமா பெற்ற பிறகு, கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் உள்ள Dundee பல்கலைக்கழகத்திற்கு பயோமெடிக்கல் அறிவியலில் பட்டம் பெற்றார். அவர் தற்போது முனைவர் பட்டக் கல்வி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் அவர் Bronchiectasis என்ற நுரையீரல் நோய்க்கான சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்து உள்ளார். ஊரடங்கு ஸ்காட்லாந்தில் நடப்புக்கு வந்ததை அடுத்து அந்த ஆய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, COVID-19 தொற்றுக்கான சிகிச்சை தொடர்பான ஆய்வு செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதில் அந்த தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்க எவ்வளவு நாளாகும் என்று தெரியாது என்றும், ஆனால் அது கண்டுபிடிக்கப்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களுக்கு நோய்த்தொற்று..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…