கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இரு மால்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

(Photo: TODAY)

லக்கி பிளாசா மற்றும் பெனின்சுலா பிளாசா ஷாப்பிங் சென்டர்களில் நீண்டநாட்களுக்கு பிறகு நேற்று முதல் முறையாக கூட்டம் களைகட்டியது.

வார இறுதி நாட்களில் அந்த இரண்டு மால்களுக்கான நுழைவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் வாடிக்கையாளர்கள் கூட்டம் அங்கு அலைமோதியது.

COVID-19 தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியருக்கு கிருமித்தொற்று!

ஊழியர்கள் தங்கள் விடுமுறை நாட்களில், முக்கியமாக பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் நாட்டு பணிப்பெண்கள் இங்கு ஒன்றுகூடுவது வழக்கம்.

அந்த இரண்டு மால்களுக்குள் நுழைய பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிகமான வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வருவது குறித்து கடைக்காரர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இருப்பினும், பாதுகாப்பு இடைவெளி தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவற்றை கவனிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்த இடங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகாகமாவே காணப்பட்டது.

உறவுகளை பிரிந்து வாழும் வெளிநாட்டு ஊழியர்கள்… திறமைகளை விட்டு பிரிவதில்லை!