ஜூரோங்கின் புதிய தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்கள் கவலை!

Photo: MOH

புதிதாக ஜூரோங்கில் கட்டப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் ஏற்பட்டுள்ள பல்வேறு வசதிக் குறைபாடுகளை எடுத்துக்காட்டும் வகையில் பல காணொளிகளும், புகைப்படங்களும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த இணையதள பதிவேற்றங்களின் மூலம் அங்கு தங்கியுள்ள ஊழியர்கள், தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும், அவலங்களையும் வெளி உலகிற்கு எடுத்துரைக்கின்றனர்.

அக்டோபர் 20 முதல், தடுப்பூசி போடாதவர்களுக்கு புதிய விதி!

கோவிட்-19 தாெற்றுப் பரவலின் காரணமாக ஏற்படும் உடல் இயலாமையை சரிசெய்ய மருத்துவ உதவி பெறுவதில் பெறும் குறைபாடு இருப்பதாகவும், சரியான முறையில் மருத்துவ உதவி கிடைப்பதில்லை என்றும் தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

நாளுக்கு நாள் தங்குவிடுதியின் அலட்சியத்தினால் நிலைமை மோசமாகிக் கொண்டிருந்த நிலையில், விடுதியில் உள்ள சுமார் 2000 ஊழியர்கள் ஒன்றாக கூடி, தங்கு விடுதியின் நிர்வாகத்தினரிடம் முறையீடு செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது தங்குவிடுதி நிர்வாகத்தினரால் போலிஸ் படை அங்கு வரவழைக்கப்பட்டு, ஊழியர்களைக் கட்டுபடுத்தியுள்ளனர்.

அதாவது, தங்குவிடுதியில் உள்ள ஊழியர்களில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கோவிட்-19 தாெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாெற்று ஏற்பட்ட அவ்வூழியர்களை சரியான முறையில் தனிமைப்படுத்தபடவில்லை என்றும், அவர்களுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை வழங்கவில்லை என்றும், அவர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதில் பல்வேறு தடைகள் ஏற்படுவதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

தங்கு விடுதியில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் ஒன்று கூடி, தங்களை சரியாக கவனிப்பதில்லை என்றும், கெட்டுப்போன உணவுகளை தங்களுக்கு உண்பதற்குக் கொடுக்கப்படுவதாகவும் குறை கூறியுள்ளனர்.

மேலும் கோவிட்-19 தாெற்று ஏற்பட்ட ஊழியர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு இடமின்றி தங்களிடமிருந்து மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளுமோ என்ற அச்சத்தில் அறைகளுக்கு வெளியே வராண்டாவிலும், நடைபாதையிலும் தங்கியுள்ளனர்.

இச்சம்பவத்தை இணையத்தில் வந்த சில புகைப்படங்கள் தெளிவுபடுத்துகின்றன.

கோவிட்-19 தாெற்று ஏற்பட்ட ஊழியர்களை ஒழுங்கான இடங்களில் தனிமைப்படுத்துவதில் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சு விசாரணையில் கண்டறிந்துள்ளது.

இனி தங்குவிடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு எவ்வித குறையுமின்றி, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் இதரவைகளும் சரியான நேரத்தில் கிடைக்குமென்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

“லண்டன், சிங்கப்பூர் இடையே விமான சேவை”- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு!