சிங்கப்பூர் லிட்டில் இந்தியா உணவகங்களின் நிலவேம்புக் கசாயம் மற்றும் நண்டு ரசம்..!

கொரோனா வைரஸ் காரணமாக லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் சற்று மந்தமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், தேக்கா சந்தை உணவங்காடி நிலையத்தின் பரபரப்பு குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சுவா சூ காங்கில் கலவரத்தில் ஈடுபட்டதாக 13 நபர்கள் மீது குற்றச்சாட்டு..!

இது ஒருபுறம் இருந்தபோதிலும், நோய் எதிர்ப்பாற்றலைக் அதிகரிக்கும் நம்பிக்கையில் மூலிகைப் பொடிகளின், தாளிப்புப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதாகக் கடைக்காரர்கள் கூறுகின்றனர் என “தமிழ் முரசு” குறிப்பிட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக நிலவேம்புப் பொடியின் விற்பனை நன்றாக உள்ளது. பஃப்ளோ சாலை, ‘ஸ்ரீ லேவண்டர் மல்டி மார்ட்’ கடைக்கு வெளியே 40க்கும் மேற்பட்ட பொடி வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 4 புதிய COVID-19 சம்பவங்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஐ தாண்டியது..!

நிலவேம்பு, மஞ்சள் பொடிகளை அதிகமானோர் வாங்கிச் செல்வதாகக் சிராங்கூன் சாலை, சதீ‌ஷ் டிரேடிங் அண்ட் என்டர்பிரைஸ் மளிகைக் கடையின் உரிமையாளர் திரு மாரிமுத்து துரைசாமி (62) கூறியுள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு நிலவேம்புக் குடிநீரை இலவசமாக வழங்குவது, விற்பனை செய்வது, நண்டு ரசம் இலவசமாக வழங்குவது போன்ற செயல்களில் லிட்டில் இந்தியாவின் உணவுக் கடைகள் சில செய்து வருகின்றன.

Source : Tamil Murasu

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள்