இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்புவோர் 14 நாள் ஹோட்டலில் தனிமை..!

(GETTY IMAGES)

ஆசியான் நாடுகள், பிரான்ஸ், இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்த வழங்கப்பட்டுள்ள இடங்களில் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 5) இரவு 11.59 மணி முதல், சிங்கப்பூருக்குள் வரும் சிங்கப்பூரர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) சனிக்கிழமை (ஏப்ரல் 4) அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பள்ளிகள், வேலையிடங்கள் மூடல் எதிரொலி; மால்களில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்..!

முன்னதாக, US மற்றும் UK-வில் இருந்து திரும்பி வருபவர்கள் மட்டுமே தனிமைப்படுத்த வழங்கப்பட்டுள்ள இடங்களில் தங்க வேண்டியிருந்தது.

வெளிநாடுகளில் இருந்து வந்தோர் மூலம் சிங்கப்பூரில் ஏற்பட்ட நோய் அபாயத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை விரிவாக்கப்பட்டுள்ளது என்று MOH கூறியுள்ளது.

சிங்கப்பூருக்குத் திரும்பும் அனைவருக்கும் தனிமைப்படுத்தும் இடங்களை அமைத்துத் தர தற்போது போதிய இடங்கள் இல்லை.

எனவே, சில நாடுகளிலிருந்து திரும்புவோருக்கு மட்டுமே தனிமைப்படுத்தும் இடங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் COVID-19: குறைந்தது இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் முஸ்தபா சென்டர்..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil