சிங்கப்பூரில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையாக 1,426 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

1,426 new COVID-19 cases in Singapore, mostly foreign workers in dormitories
1,426 new COVID-19 cases in Singapore, mostly foreign workers in dormitories

சிங்கப்பூரில் நண்பகல் நிலவரப்படி, புதிதாக 1,426 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 8,014ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: 650,000 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வீட்டு பணியாட்களுக்கு இலவச முகக் கவசங்கள்..!

பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

புதிய சம்பவங்களில், பதினாறு பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், இன்று இரவு செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Avery Lodge, Cassia @ Penjuru, Westlite Mandai Dormitory, PPT Lodge 1A, மற்றும் Jurong Penjuru Dormitory 1 ஆகியவை தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசிதழில் சுகாதார அமைச்சின் (MOH) அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 5 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!