COVID-19: 650,000 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வீட்டு பணியாட்களுக்கு இலவச முகக் கவசங்கள்..!

(Photo: Temasek Foundation)

வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக மொத்தம் 400,000 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் 250,000 வீட்டுப் பணியாட்களுக்கும் முகக் கவசங்களை வழங்க உள்ளதாக Temasek அறக்கட்டளை (ஏப்ரல் 19) தெரிவித்துள்ளது.

சமீபத்திய COVID-19 பரவல், குழுமங்களில் அதிகம் காணப்பட்டதை தொடர்ந்து, வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்புக்காக கூடுதல் முகக் கவசங்களை வழங்குவது முக்கியம் என்று அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் முஸ்தபா சென்டர் மூடல் நீட்டிப்பு – சுகாதார அமைச்சகம்..!

ஊழியர்களுக்கு filter pocket கொண்ட 1.3 மில்லியன் மறுபயன்பாடு துணி முகக் கவசங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒவ்வொரு ஊழியருக்கும், மறுமுறை பயன்படுத்தக்கூடிய இரண்டு துணி முகக் கவசங்கள் மற்றும் ஒரு சர்ஜிக்கல் முகக் கவசம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகக் கவச தொகுப்பு திங்கள்கிழமை முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கு படிப்படியாக விநியோகிக்கப்படும்.

தங்கும் விடுதி இயக்குநர்களுக்கு இவற்றை பெறுவதற்கான விவரங்களை வெளிநாட்டு ஊழியர்கள் மையம் தெரிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வீட்டுப் பணியாட்களுக்கு முகக் கவசங்கள் மே மாத இறுதியில் இருந்து அவர்களின் குடியிருப்பு முகவரிகளுக்கு அனுப்பப்படும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மலேசிய நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு; COVID-19 காரணமில்லை – MOH..!