‘தெம்பனீஸில் 130 பிளாக்குகளுக்கு குளிர்ச்சியைத் தரும் வண்ணப்பூச்சு பயன்படுத்தப்படும்’- வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தகவல்!

Photo: Housing And Development Board

 

சிங்கப்பூரில் சுற்றுப்புற வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் வரை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பைலட் திட்டத்தின் கீழ், ஒரு புதிய வகை வெப்ப -பிரதிபலிப்பு வண்ணப்பூச்சு தெம்பனீஸில் உள்ள வீட்டு வசதி வாரியத்திற்கு (Housing Board blocks in Tampines) சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் உள்ள 130 வீடுகளுக்கும், இந்த வண்ணப்பூச்சு பயன்படுத்தப்படும். இதனால் வீடுகளில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும்.

சேகரிக்கப்பட்ட தரவு சிங்கப்பூர் முழுவதும் கட்டிட முகப்புகள் மற்றும் நடைபாதைகளில் குளிர் வண்ணப்பூச்சுகளைப் (Cool Paints) பயன்படுத்த முடியுமா என்பதை அறிய பகுப்பாய்வு செய்யப்படும் என்று வீட்டு வசதி வாரியம் நேற்று (07/08/2021) தெரிவித்தது.

13 மாதங்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பச்சிளங் குழந்தை!

பெரிய அளவிலான பைலட் திட்டம் (Pilot Project) 10 வருட திட்டத்தின் கீழ் வருகிறது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (Housing And Development Board- ‘HDB’ Towns) டவுன்ஸ் திட்டம், தற்போதுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நகரங்களையும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையும், குளிர்ச்சியும், ஆற்றல் நுகர்வு குறைத்தல் மற்றும் மழைநீரை மறுசுழற்சி செய்வதன் மூலம் வாழ வைக்கும்.

கடந்த ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று தெம்பனீஸ் டவுன் கவுன்சில் (Tampines Town Council) சுழற்சி பழுது மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்கான டெண்டரை அறிமுகப்படுத்தியது. இதில் (Tampines Street 83 and 84) தெம்பனீஸ் தெரு 83 மற்றும் 84- ல் உள்ள 20- க்கும் மேற்பட்ட பிளாக்குகள் மற்றும் நடைபாதைகளின் முதல் பகுதியில் மீண்டும் பூசுவதற்கு குளிர் வண்ணப்பூச்சு பயன்படுத்தப்படுகிறது. இதற்கான டெண்டர் செப்டம்பர் 1- ஆம் தேதி மூடப்படும்.

இந்த பிளாக்குகள் (Blocks) மற்றும் நடைபாதைகளை (Pavements) மீண்டும் பூசுவது அடுத்த ஆண்டு நான்காம் காலாண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பைலட்டின் கீழ் மீதமுள்ள பிளாக்குகளில் படிப்படியாக மீண்டும் பூசப்படும். பைலட் திட்டம் (Pilot Project), அதன் மதிப்பாய்வு உட்பட, 2024- ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிளாக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு மீண்டும் கட்டாய கொரோனா பரிசோதனை!

கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் பகலில் வெப்பத்தை உறிஞ்சி, இரவில் தங்கள் சுற்றுப்புறங்களில் சேமித்த வெப்பத்தை வெளியிடுகின்றன.குளிர்ந்த வண்ணப்பூச்சுடன் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்புகள் பகலில் குறைந்த வெப்பத்தை உறிஞ்சுகின்றன, இதனால் இரவில் குறைந்த வெப்பத்தை வெளியிடுகிறது மற்றும் குளிர்ந்த சூழலுக்கு வழிவகுக்கிறது. குளிர்ந்த சூழலைத் தரும் வண்ணப்பூச்சு மற்றும் வழக்கமான வண்ணப்பூச்சு இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டுக்கு இடையில் துவாஸ் மற்றும் புக்கிட் புர்மேயில் ( Tuas and Bukit Purmei) இரண்டு சிறிய அளவிலான சோதனைகளில் குளிர்ச்சியான சூழலைத் தரும் வண்ணப்பூச்சு முன்பு சோதிக்கப்பட்டது. மேலும் குளிர் வண்ணப்பூச்சு (Cool Paint) பூசப்பட்ட கட்டிடங்களின் வெப்பநிலை வழக்கமான வண்ணப்பூச்சுடன் ஒப்பிடப்பட்டது.

700க்கும் மேற்பட்ட முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை வாய்ப்பு!

பூர்வாங்க கண்டுபிடிப்புகள் குளிர்ந்த வண்ணப்பூச்சு பூசப்பட்ட கட்டிடங்களைச் சுற்றியுள்ள சுற்றுப்புற வெப்பநிலை இரவும், பகலும் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கப்பட்டது.

குளிர் வண்ணப்பூச்சுகள் சில காலமாக கிடைக்கின்றன என்றாலும், அவை முன்பு பொருளாதார ரீதியாக குறைவாகவே இருந்தன, மேலும் குளிர் வண்ணப்பூச்சுகளின் ஆயுள் குறித்து மேலும் ஆய்வு தேவை என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியுள்ளது.