100- க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ள ‘SECRETLAB’ நிறுவனம்!

File Photo

 

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அமல்படுத்தப்பட்டக் கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதேநேரம், தொழிலாளர்கள் பலர் வேலைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும், உலகின் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களை சிங்கப்பூரில் வந்து தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் 3 பொது மக்களுக்கு மீண்டும் திறப்பு

அதற்கான முயற்சியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சிங்கப்பூரில் தொழில் தொடங்க முன் வந்துள்ளனர். அத்துடன், பணியாளர்களை நியமிப்பதில் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை அளித்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

இந்த நிலையில், உள்ளூர் விளையாட்டு- நாற்காலி தயாரிப்பு நிறுவனமான ‘SECRETLAB’, 100- க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை வழங்கவிருக்கிறது. இந்நிறுவனம், மின்னிலக்க விளையாட்டுகளுக்கான சிறப்பு நாற்காலிகளையும், வேலை செய்பவர்களுக்கு ஏதுவான நாற்காலிகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘SECRETLAB’ நிறுவனத்தின் தயாரிப்புக் குழுவை இரட்டிப்பாக்க, சுமார் 80 பொறியாளர்களையும், வடிவமைப்பாளர்களையும் பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இரவு விருந்தில் அதிக நபர்களை அனுமதித்த உணவகம் மீது குற்றச்சாட்டு.!

கடந்த சில ஆண்டுகளாக ‘SECRETLAB’ நிறுவனம் பெரும் வளர்ச்சியைக் கண்டதால், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக, அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்த படியே வேலை செய்யும் முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதால், இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் நாற்காலிக்களுக்கான தேவை உலக அளவில் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் சுமார் 10,000 நாற்காலிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக ‘SECRETLAB’ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.