சிங்கப்பூரின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 5.8 சதவீதம் சுருங்கியது

(PHOTO: Reuters)

கடந்த 2020ஆம் ஆண்டில் தொற்றுநோய் காரணமாக சிங்கப்பூரின் பொருளாதாரம் 5.8 சதவீதம் சுருங்கியதாக, ஆரம்ப தரவு நிலவரங்கள் (ஜனவரி 4) தெரிவிக்கின்றன.

இருப்பினும், நான்காம் காலாண்டில் COVID-19 பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பெரும்பாலான தொழிற்துறைகள் சில முன்னேற்றங்களைக் கண்டன.

ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த குழந்தையை மீட்ட வெளிநாட்டு ஊழியர் – காணொளி

இது 2001க்குப் பிறகு ஏற்பட்ட சிங்கப்பூரின் முதல் வருடாந்திர சுருக்கம் இதுவாகும், மேலும் சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான மந்தநிலை இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேவை கட்டுப்பாடுகள் மற்றும் எல்லை மூடல்கள் காரணமாக சிங்கப்பூர் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் கட்டுமானம், விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6 சதவீதத்திற்கும் 6.5 சதவீதத்திற்கும் இடையில் சுருங்கும் என்று அரசாங்கம் உத்தேச மதிப்பீடு செய்தது.

கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 3.8 சதவீதமாக சுருங்கியது. மூன்றாம் காலாண்டில் பதிவான 5.6 சதவீத சுருக்கத்தை காட்டிலும் இது குறைவு.

ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்பட்ட 9.5 சதவீத வளர்ச்சியை தொடர்ந்து, 2020ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் கனமழை காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…