சிங்கப்பூரின் உற்பத்தி நவம்பர் மாதத்தில் 17.9 சதவீதமாக உயர்வு!

(PHOTO: Reuters)

சிங்கப்பூரின் ஆண்டு அடிப்படையில் உற்பத்தி நவம்பரில் 17.9 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது உயிரியல் மருத்துவ உற்பத்தி மற்றும் மின்னணுவியல் மூலம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரியல் மருத்துவ உற்பத்தியைத் தவிர்த்து, உற்பத்தி 14 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பொருளியல் மேம்பாட்டு கழகம் (EDB) இன்று (டிசம்பர் 24) தெரிவித்துள்ளது.

இந்த நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடு!

இது  அக்டோபரில், ஆண்டு அடிப்படையில் 0.8 சதவீத சரிவை சந்தித்தது, இது போக்குவரத்து பொறியியலில் ஏற்பட்ட சரிவால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதந்தோறும் அடிப்படையில், நவம்பரில் உற்பத்தி 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. உயிரியல் மருத்துவ உற்பத்தியைத் தவிர்த்து, உற்பத்தி 6 சதவீதம் வளர்ச்சி கண்டது.

உயிரியல் மருத்துவ உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நவம்பரில் 40.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

மருத்துவ சாதனங்களுக்கான ஏற்றுமதியில் அதிக தேவை காரணமாக மருத்துவ தொழில்நுட்ப பிரிவும் 22.7 சதவீத வளர்ச்சி கண்டது.

மின்னணு துறை உற்பத்தி முந்தைய ஆண்டை விட நவம்பரில் 34.9 சதவீதம் அதிகரித்துள்ளது

பிரிட்டனில் பரவும் புதுவகை கிருமித்தொற்றின் முதல் சம்பவம் சிங்கப்பூரில் பதிவு

சிங்கப்பூரில் புத்தாண்டு கண்கவர் வாணவேடிக்கை நடைபெறும் 11 முக்கிய இடங்கள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…