நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு சிங்கப்பூர் அரசு வாழ்நாள் தடை விதித்தது ஏன்?- சீமான் பதில்!

Photo: Naam Tamilar Katchi Official Twitter Page

சிங்கப்பூரில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம். வாழ்வாதாரத்திற்காகவும், குடும்ப சூழல் காரணமாக, சிங்கப்பூருக்கு வந்து பணிபுரிந்து வரும் தமிழர்களுக்கு, அங்குள்ள சமூக அமைப்புகள் பல்வேறு வகைகளில் உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, தமிழர்கள் பலரும் சிங்கப்பூர் அரசின் அமைச்சர்களாக உள்ளனர். அவர்கள் முக்கிய துறைகளில் பதவி வகித்து வருகின்றனர். தமிழ்நாடு- இந்தியா கலாச்சார ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நெருங்கிய தொடர்புடையது. இந்தியாவிலேயே திருச்சியில் இருந்துதான் சிங்கப்பூருக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் புதிதாக 255 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

இந்த நிலையில், தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்ற 25 வயது இளைஞர் சிங்கப்பூருக்கு வந்து பணிபுரிந்து வந்தார். இவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். சிங்கப்பூரில் குமார் தொடர்ந்து நாம் தமிழர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது கட்சி பணி தொடர்பான நடவடிக்கையை சிங்கப்பூர் அரசு கண்டுபிடித்தது.

இதையடுத்து, அவரை உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம், குமார் சிங்கப்பூர் வர வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் இனி சிங்கப்பூர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஓமிக்ரான் பாதிப்பால் ஊழியர் தங்கும் விடுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? – அமைச்சர் பதில்

அதேபோல், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 400 பேரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், அவர்களுக்கு சிங்கப்பூருக்கு வருவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்படவில்லை என்று தகவல் கூறுகின்றன.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் நிர்வாகி குமார் என்பவருக்கு சிங்கப்பூர் அரசு வாழ்நாள் தடை விதித்தது ஏன்? என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்தார்.

மலேசியாவில் கடும் வெள்ளம்: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 21,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

அப்போது அவர் கூறியதாவது, “நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தம்பி குமார் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது. இது அவசியமற்றதும் கூட, ஏற்கனவே, 400- க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களை சிங்கப்பூர் அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பாக, தூதரகத்தில் பலமுறை முறையீட்டு பார்த்தேன்; போராடி பார்த்தேன். அது ஒன்னும் சரியாக வரவில்லை.

இவ்வளவுக்கும் லீ குவான் யூவை நாங்கள் கொண்டாடியிருக்கிறோம். அவர்களை பொறுத்த வரைக்கும் எங்கள் அண்ணன் தான் பிரச்சனை. பிரபாகரனை காரணம் காட்டுகின்றன. சிங்கப்பூரில் எங்களுடைய கட்சி முதலில் வலிமையாக இருந்தது. அது இப்போது இல்லை. எங்களுடைய நடவடிக்கையை முழுவதும் முடக்கிவிட்டனர். நாம் தமிழர் கட்சிக்காரர்களை உள்ளே விடவில்லை என்றால், என் நிலைமையை யோசித்துப் பாருங்கள். இனி கடவுச்சீட்டு தரமாட்டார்கள்; இனி எங்கேயும் நுழைய விடமாட்டார்கள். அவருக்காக வருந்துகிறேன்”. இவ்வாறு சீமான் கூறினார்.