வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்தியதாக இரண்டு பணிப்பெண்கள் கைது!

Photo: Singapore Customs Official Facebook Page

சிங்கப்பூரில் வரி செலுத்தாமல் பொருட்களைக் கடத்திக் கொண்டு வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

சிங்கப்பூர் இன மற்றும் சமய நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்மாதிரியாக திகழும் நாடு!

அந்த வகையில், கடந்த நவம்பர் 1 மற்றும் நவம்பர் 2- ஆம் தேதிகளில் வாம்போ டிரைவ் (Whampoa Drive) மற்றும் சூவா சூ காங் சென்ட்ரல் (Choa Chu Kang Central) ஆகிய இரு இடங்களில் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகளின் அதிகாரிகள் (Immigration & Checkpoints Authority- ‘ICA’) அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இரண்டு பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். பார்சலில் மிளகாய் தூள், நூடுல்ஸ், மருந்துகள் போன்றவற்றுடன் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கட்டுக்கட்டாகப் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் சுங்கத்துறைக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், விரைந்து வந்த அதிகாரிகள் வரி செலுத்தப்படாத 56 சிகரெட் பாக்கெட்டுகளையும் (56 Packets Of Duty- Unpaid Cigarettes), 36 அட்டைப் பெட்டிகளையும் (36 carton) பறிமுதல் செய்தனர்.

இந்திய வம்சாவளி ஆடவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்!

இந்த பார்சலைக் கொண்டு வந்ததாக இரண்டு பணிப்பெண்களை அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அந்த இரண்டு பெண்களுக்கும் வயது 26 ஆகும்.

விசாரணையில், சிகரெட்டுகளை வாங்கி உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றுடன் மறைத்து பார்சலில் சிங்கப்பூரில் உள்ள தங்களது நண்பர்களின் முகவரிக்கு அனுப்பும்படி, பணிப்பெண்கள் தங்களது சொந்த நாட்டில் உள்ள உறவினர்களிடம் கூறியுள்ளனர். அதன்படி, பணிப்பெண்களின் உறவினர்களும் பார்சலில் சிகரெட்டுகளை மறைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பியது தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக, அந்த இரண்டு பார்சலை பணிப்பெண்கள் பெற்றுக் கொண்டதாகவும், அப்போது அதிகாரிகளிடம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் மூலம் மோசடி – போலீஸ் எச்சரிக்கை

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.