ActiveSG விளையாட்டு வசதிகளில் சுமார் 1,000 பேர் விதிமுறைகளை மீறியுள்ளனர்..!

1,000 cases of safe management violations at ActiveSG facilities
1,000 cases of safe management violations at ActiveSG facilities (PHOTO: Yahoo News Singapore)

ActiveSG விளையாட்டு வசதிகள் ஜூன் 19 அன்று மீண்டும் திறக்கப்பட்டது, அன்றிலிருந்து சுமார் 1,000 பேர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய மீறல்களில் குழு மாறுவது, வேறொருவரின் பெயரில் இடங்களை முன்பதிவு செய்தல் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இணையத்தில் பகிரப்பட்ட நாய் துன்புறுத்தும் காணொளி – விசாரணை நடைபெறுகிறது..!

ActiveSG தலைவர் Sng Hock Lin கூறுகையில்: “அனைத்து நடவடிக்கைகளும் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, (தேசிய நிறுவனம்) சிங்கப்பூர் விளையாட்டு அமைப்பிற்கும் புதியவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மீறல்களில் பெரும்பாலானவை எச்சரிக்கைகள் அல்லது நினைவூட்டல்களாக விடப்பட்டன, ஒரு சில மீறல்கள் ActiveSG வசதிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதில் தினசரி விதி மீறல்களின் எண்ணிக்கை முதல் சில வாரங்களில் சுமார் 30 ஆக இருந்தது, கடந்த வாரத்தில் ஒற்றை இலக்கங்களாக அது குறைந்துள்ளது.

இதில் ActiveSG, கூடுதலாக பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்தும் நோக்கில், புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.

ஒவ்வொரு திடலுக்கு, வெவ்வேறு நிறக் கைப்பட்டை, பொது நீச்சல் குளத்திற்கான நேர அட்டவணையை மறுஆய்வு செய்தது ஆகியவை அந்த புதிய நடைமுறையில் அடங்கும்.

இதையும் படிங்க : தேசிய தின அணிவகுப்பு பைகள் விநியோகம் – எங்கு பெற்றுக் கொள்ளலாம்..?

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg