சிங்கப்பூர் தமிழர்களின் இதய நாயகன்.. நிகரில்லா தலைவரின் 100வது பிறந்தநாள் நாணயம் – வெளிநாட்டு ஊழியர்கள் எப்படி பெறுவது?

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் (LKY100) 100வது பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக S$10 நாணயம் வெளியானது.

இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள 142 வங்கிக் கிளைகளில் வரும் டிசம்பர் 4 முதல் 31 வரை பொதுமக்கள் LKY100 நாணயத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

பார்வையில்லா ஊழியரின் மசாஜ் கடை: வாரம் 7 நாளும் உழைப்பு.. உதவிக்கு யாரும் இல்லாமலும் உழைக்கும் சிங்கப்பூரின் இரும்பு மனிதர்

தேர்வு செய்யப்பட்டுள்ள வங்கிகள்:

  • DBS வங்கி / POSB வங்கி
  • Oversea-Chinese Banking Corporation Limited
  • United Overseas வங்கி
  • Bank of China
  • Citibank Singapore Limited (நடப்பு/சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும்)
  • HSBC வங்கி
  • Industrial and Commercial Bank of China Limited Singapore Branch
  • Maybank Singapore Limited
  • Standard Chartered வங்கி

பங்கேற்கும் வங்கிக் கிளைகள் மற்றும் அவற்றின் இருப்பிடம் குறித்த விரிவான பட்டியல் அறிய: https://go.gov.sg/lky100coin-bankbranches

சுமார் 700,000 க்கும் மேற்பட்ட LKY100 நாணயங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று MAS தெரிவித்துள்ளது.

LKY100 நாணயங்களை பெறவிரும்புவோர் NRIC-யை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.

வெளிநாட்டவர்கள், பாஸ்போர்ட் அல்லது வேலை அனுமதிகளை கொண்டு செல்ல வேண்டும் என MAS நினைவூட்டியது.

 

சிங்கப்பூரில் கடை திருட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்களுக்கு சிறை – சிலர் சிங்கப்பூரை விட்டு எஸ்கேப்