COVID-19: குணமடைந்த நோயாளிகளிடம் இருந்து இரத்தம் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை..!

11 recovered COVID-19 patients in Singapore to donate blood for plasma therapy treatment
11 recovered COVID-19 patients in Singapore to donate blood for plasma therapy treatment (Photo: AFP/Diana Berrent)

COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த 11 பேர், இந்த வைரஸின் புதிய சிகிச்சைக்காக இரத்த தானம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று சிங்கப்பூரின் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தின் (NCID) இயக்குனர் டாக்டர் ஷான் வாசு தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஷான் கூறுகையில், COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பரிசோதனைக்கு தற்போது உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : “நமது ஆகப் பெரிய தெற்காசிய சமூகம், தமிழர் சமூகம்” – பிரதமர் லீ தமிழ் புத்தாண்டு வாழ்த்து..!

சோதனையில் அவர்கள் பொருத்தமானவர்கள் என மதிப்பிடப்பட்டால், இரத்தத்தின் பிளாஸ்மா திரவத்தை நவீன சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ‘convalescent plasma therapy’ என்னும் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும்.

குணமடைந்த நோயாளிகளிடம், நோய்த்தொற்றுக்கு எதிராக உதவக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்ற என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக டாக்டர் வாசு தெரிவித்தார்.

இந்த நவீன சிகிச்சை முறை, பிளாஸ்மா திரவத்தைக் கொண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் குணப்படுத்த முயற்சி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாடுகள் இந்த சிகிச்சை சோதனைகளில் வெற்றி கண்டுள்ளனர். தென் கொரியாவில், பிளாஸ்மா சிகிச்சையைப் பெற்ற பின்னர் இரண்டு நோயாளிகள் COVID-19 தொற்றிலிருந்து மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 560 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: 10 சிங்கப்பூரர்களில் ஒன்பது பேருக்கு தலா $600 செலுத்தப்படும்..!